பதிவு செய்த நாள்
11
பிப்
2025
03:02
கம்பம்; ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சண்முகநாதன் கோவில் தைப்பூசத் திருவிழா இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்.
ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில், அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது சண்முகநாதன் கோவில்.அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கோயிலில் பங்குனி உத்திரம், தைப்பூச நாட்களில் அதிக பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்வது வழக்கம், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு கம்பம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதல் கூட்டம் வந்து கொண்டிருந்தது. சர்வ அலங்காரத்தில் முருகள் எழுந்தருளினார். முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால் தயிர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் என பல பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் கமிட்டி சார்பாக நடைபெற்ற அன்னதானத்தில் ஆயிரக்கணக்கில் பத்தர்கள் பங்கேற்றனர். விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கம்பம் கே.ஆர்.ஜெயப்பாண்டியன், சிவனடியார் முருகன் சுவாமிகள், அர்ச்சகர் கணபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டு, அணைப்பட்டி போன்ற ஊர்களுக்கு சிறப்பு பஸ் விடப்பட்டது.
கம்பம் : கம்பம் வேலப்பர் கோயிலில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வழங்கிய பால் அண்டாக்கங்களில் நிரப்பப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசிக்க திரளாக பக்தர்கள் குவிந்தனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில்களிலும் தைப்பூச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.