Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் காவடி எடுத்து வந்து பா.ஜ., ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குழந்தைகள் வடம் பிடிக்க உலா வந்த சுப்ரமணியர் தேர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷம் அதிர கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரோகரா கோஷம் அதிர கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
10:02

வீரபாண்டி; காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம், ஏராளமான பக்தர்களின், ‘அரோகரா’ கோஷம் அதிர, கோலாகலமாக நடந்தது.


சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழா, கடந்த, 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, வள்ளி தெய்வானையுடன் கந்தசாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்ஜோதி, உதவி கமிஷனர் சுவாமிநாதன், செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி முன்னிலையில், முதலில் விநாயகர் தேரை, திரளான பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமியை சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் தொடங்கியது. கோவில் முன் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அரோகரா’ கோஷம் அதிர, வடம்பிடித்து தேரை இழுத்து, கோவிலை வலம் வந்தனர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள், அவர்கள் வயல்களில் விளைந்த தானியங்கள், உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது வீசி, காணிக்கையாக செலுத்தினர். பலர், பாத யாத்திரையாக வந்து பங்கேற்றதோடு பால், பன்னீர், இளநீர், புஷ்ப காவடிகளை எடுத்து வந்து, காணிக்கையாக செலுத்தினர். அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி முதல் காளிப்பட்டி வரை வழி நெடுக, தண்ணீர் பந்தல்கள், அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், உணவு வழங்கப்பட்டன. இதையொட்டி, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை இரவு சத்தாபரணம், நாளை மறுநாள் வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar