பதிவு செய்த நாள்
12
பிப்
2025
01:02
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், 45ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல், பால்காவடி சமர்ப்பித்தல், மூலவர் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. மதியம், 2:00 மணிக்கு, மயில் காவடி சமர்ப்பித்தலும், மாலை, 5:00 மணிக்கு, பரண் மீது, நாகராஜ் என்பரின் நெஞ்சில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், தினகர் என்ற பக்தர் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து சென்று முருகனுக்கு மாலை அணிவித்தல், குழந்தையை சுமந்து சென்று ஆசி பெறுதல், போற்றிச்செல்வர் என்ற பக்தர் முதுகில் அலகு குத்தி ராட்டினத்தில் அந்தரத்தில் சுற்றி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாராஜகடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, முருகன் திருத்தேர் ஊர்வலம், மயிலாட்டம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.