பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம்;வாழ்வில் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வரும் வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியனும், சனி பகவானும் தடைபட்ட வேலைகளை எளிதாக ஒவ்வொரு வேலைகளும் இப்போது எளிதாக நடைபெறும். உங்கள் நீண்ட நாள் கனவு நனவாகும் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். உடலில் இருந்த நலிவு விலகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் கேதுவிற்கு பாக்கிய குருவின் பார்வை உண்டாவதால் குழப்பம் விலகும். வியாபாரத்தில் எதிர்ப்பு, பிரச்னை, போட்டிகள் என்றிருந்த நிலையெல்லாம் இப்போது முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர் நிலை உயரும். சுக்கிரன், ராகு சஞ்சரித்து வருவதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் பழகுவது நல்லது. உங்களுக்கு இக்காலம் முன்னேற்றமான காலமாகும். செல்வாக்கு, அந்தஸ்து அனைத்தும் உயரக்கூடிய காலமாகும். இந்த நேரத்தில் வேறு ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவதால் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 3, 4.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 19, 23, 28. மார்ச் 1, 5, 10, 14.
பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடம் விலகும்.
அஸ்தம்: மனம் சொல்கிறபடி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் தெளிவாகவும், திட்டமிட்டும் செயல்படுவீர். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நெருக்கடி நீங்கும். ஆறாம் இடத்தில் ஆத்மகாரகன், உங்கள் ராசிநாதன், கர்மகாரன் சஞ்சரித்து வருவதால் உங்களுக்குள் அசாத்தியமான துணிச்சலும் நம்பிக்கையும் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு இப்போது நனவாகும். இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். மனதில் இருந்த சிரமம் குறையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி அடையும். தடைபட்ட வேலை நடக்கும். அரசு வழியில் எடுக்கும் முயற்சி சாதகமாகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடல்நலம் சீராகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். எதிர்ப்பு விலகும். வாழ்க்கையில் புதிய பாதைத் தெரியும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பண வரவு அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஒரு சிலருக்கு இருக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். தொழிலுக்கு தேவையான முதலீடுகளை அதிகரிப்பீர். அரசு பணியாளர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வயதானவர் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி ஆரோக்கியம் கூடும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 4, 5.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 20, 23, 29. மார்ச் 2, 11, 14.
பரிகாரம்: அபிராமியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 1, 2ம் பாதம் : துணிச்சலுடனும் தைரியமாகவும் செயல் பட்டுவரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் மிகவும் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் வக்கிர நிவர்த்தி ஆகி கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமாக செயல்படத் தொடங்குவீர். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் விருத்தியாகும். புதிய முயற்சி வெற்றியாகும். சனியும் சூரியனும் உங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்துவர். தடைபட்ட வேலையை வெற்றியடைய வைப்பார்கள். வாழ்க்கை, தொழில், குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகி மனதில் நிம்மதியான நிலை ஏற்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகுவும் சுக்கிரனும் சபலங்களை உண்டாக்குவர். ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படும் போது உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த செல்வம் செல்வாக்கு கிடைக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குரு பகவானின் பார்வை ராசிக்கு இருப்பதால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 5.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 23, 27. மார்ச் 9, 14.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.