பதிவு செய்த நாள்
12
பிப்
2025
03:02
சிம்மம்: மகம்; எந்த நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதம். சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்துவரும் நிலையில் உங்கள் ராசிநாதனும் மாதம் முழுவதும் அங்கே சஞ்சரிப்பதால் முன்பிருந்த சங்கடம் விலகும். உங்கள் ராசிக்கு சூரிய பகவானின் பார்வைக் கிடைப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் கிளைகளை வெளியூரில் தொடங்குவீர். ஒரு சிலர் வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வசித்திடக்கூடிய நிலை ஏற்படும். பிப். 26 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சுக்கிரனின் சஞ்சாரம் மார்ச் 4 வரை சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 1, 2.
அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 19, 25, 28. மார்ச் 7, 10.
பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வளம் உண்டாகும்.
பூரம் : செயல்களில் துணிவும் வாழ்க்கையில் தெளிவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் மார்ச் 4 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். வரவு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு பெரியோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். பிப். 21 முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை தடைபட்டிருந்த வருமானம் வரத்தொடங்கும். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். துணிச்சலுடன் எந்தவொரு வேலையையும் எடுத்து அதில் லாபம் காண்பீர். உங்களைக் குறைக் கூறியவர்களும் இந்த மாதம் பாராட்டுவர். குரு பகவானின் பார்வை குடும்ப, சுக, ரோக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்கள் கனவு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமான உயரும். அரசியல் வாதிகள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயாராவீர்கள்.
சந்திராஷ்டமம்: மார்ச் 2.
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 19, 24, 28. மார்ச் 1, 6, 10.
பரிகாரம்: லட்சுமியை வழிபட அதிர்ஷ்டம் தேடிவரும்.
உத்திரம் 1ம் பாதம் : வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் சிறப்பான மாதம். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் உற்சாகமாகவும் வேகமாகவும் செயல்படுவீர். நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். இதுவரையில் சந்தித்து வந்த பிரச்னைகளை விட்டு வெளியில் வருவீர். உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும் இனி அவற்றில் மாற்றம் உண்டாகும். உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியூரில் விரிவு செய்வீர். ஒரு சிலர் சொந்த வீடு கட்டி பால் காய்ச்சுவீர். ஒருசிலர் வேலைத் தொழில் காரணமாக வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வசிப்பீர். அலுவலர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பணியாளர் நிலை உயரும். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முடங்கியிருந்த தொழில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சிகளுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். உழைப்பாளர் நிலை உயரும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். மாணவர்களுக்கு படிப்பின் மீதான அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 3.
அதிர்ஷ்ட நாள்: பிப். 19, 28. மார்ச் 1, 10.
பரிகாரம்: பகவானை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.