பதிவு செய்த நாள்
14
பிப்
2025
12:02
அவிநாசி; அவிநாசி சேவூர் ரோட்டில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி சேவூர் ரோட்டில் செங்காடு பகுதியில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மன் கோவில் பல நூறு வருட பழமையான வரலாறு கொண்டதாகும். இக்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக, இன்று அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலில், ராக்கத்தம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று காலை விநாயகர் வழிபாடு, மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. நாளை காலை மற்றும் மாலை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், நாளை மறுதினம் காலை 9 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. ராக்கத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேக தினத்தன்று காலை 7 மணி முதல் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.