Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த ... திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம்; முன்னேற்பாடுகள் ஆலோசனை திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்: மாதா அமிர்தானந்தமயி அறிவுரை
எழுத்தின் அளவு:
விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்: மாதா அமிர்தானந்தமயி அறிவுரை

பதிவு செய்த நாள்

15 பிப்
2025
09:02

மதுரை; ‛விட்டுக்கொடுக்கும் பண்பால் மகிழ்ச்சி பெறலாம். ஆணவம் கூடாது என மதுரையில் மாதா அமிர்தானந்தமயி பேசினார். மதுரை பசுமலையில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு மாதா அமிர்தானந்தமயி வந்துள்ளார். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் நிறைவு நாளான நேற்று பக்தர்களிடம் பேசியதாவது: வாழ்க்கையை கடல், கவிதை, கனவு, நீண்ட துாரம் பயணம் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு ஒப்பிடுகின்றனர். ஆனால் பொறுமை, தியாகம், பணிவு, திறந்த மனப்பான்மை, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம், இதுவே முதன்மையானது. வாழ்க்கை நம் சிற்றறிவிற்கு அப்பாற்பட்ட மர்மம். அது எல்லையற்றது என்று முனிவர்கள் போற்றினர். பணிவை வளர்க்க வேண்டும். மற்றவருடைய பொருளை பலவந்தமாக கைப்பற்ற வேண்டும் என நினைத்தல் கூடாது. 


ஆற்றில் நீர் குடிக்க குனிகிறோம். அதுபோல இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். இதற்கு தடையாக இருப்பது ஆணவம். ஆணவத்தால் மற்றவரை விட நமக்கு தான் இழப்பு. இந்த உலகில் மனிதன் தவிர அனைத்து உயிர்களும் அதன் விதிமுறைப்படியே வாழ்கிறது. மனிதன் இயற்கை விதிமுறையை பின்பற்றி வாழ வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும். குழந்தைகளுக்கு அலைபேசியை கொடுத்து வளர்ப்பது தவறு. இதனால் இளமையிலே கண் மங்கிவிடும், மன அழுத்தம் ஏற்படும். குழந்தைகள் புராணக் கதைகள் கேட்பது, கடவுள் சித்திரங்கள் வரைவது போன்றவற்றால் மனநலம், வலிமை ஏற்படும். அன்பிலே பிறந்து, வளர்ந்து, வாழ்வது மனிதனின் உண்மையான இயல்பு. இதை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. இவ்வாறு பேசினார். பஜனை, சத்சங்கம், தியானம் நடந்தன. மதுரை மகாத்மா கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரேமலதா, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா மலரை சுவாமி பரமானந்தா வெளியிட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar