கூடலூர் சக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2025 10:02
கூடலூர்; கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 39ம் ஆண்டு தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலூர் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் 39 ஆம் ஆண்டு தேர்த் திருவிழா 10 தேதி, அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், 10:00 மணிக்கு திருவிழா உற்சவ பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 14ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், அதிகாலை 5:00 மணி முதல் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கூடலூர் டி.எஸ்.பி., வசந்தகுமார் துவக்கி வைத்தார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் ஊர்வலம் மேல்கூடலூர் மாரியம்மன் கோவில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில் மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து தீபதாரணை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.