சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடந்தது. நேற்று மலை அடிவாரத்தில் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத் தோட்டத்தில் தெப்ப குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவம் நடந்தது. சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளினார். குளத்தில் தெப்பம் விடப்பட்டது. இன்று மஹா தரிசனம் நடக்கிறது. தேர்த்திருவிழா வரும் 20ம் தேதி கொடி இறக்குதலுடன் நிறைவு பெறுகிறது.