கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வரர் கோவிலில் மாசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.