திருப்பரங்குன்றம் கோயில்களில் திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2025 03:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணிகளின் நேற்று துவங்கின. சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழநி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானங்களுக்கு பிப்.10ல் பாலாலயம் நடத்தப்பட்டது. சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் நேற்று சுற்றுச்சுவர் மராமத்து பணி துவங்கியது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயில் விமானங்களுக்கு மூங்கில் சாரங்கள் கட்டும் பணி துவங்கியது.