பதிவு செய்த நாள்
18
பிப்
2025
03:02
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், திரிபுரா கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி நல்லு, நேற்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, மனைவியுடன் வந்தார். கோவில் நிர்வாகிகள், கோவில் யானை மூலம் வரவேற்றனர். கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு, மூலவர் பெருமாளை தரிசித்து வழிபட்டார். பிறகு, தாயார் சன்னதிக்கு பேட்டரி காரில் சென்று சேவித்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவில் ரெங்க விலாஸ் மண்டபத்தின் மீது ஏறி, 21 கோபுரங்களை தரிசனம் செய்த அவர், பேட்டரி காரில், ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்திர மற்றும் சித்திர வீதிகளில் சுற்றிப் பார்த்தார். கோவில் நிர்வாகிகள், அவருக்கு ரெங்கநாதர் படம் வழங்கி கவுரவித்தனர்.