பதிவு செய்த நாள்
20
பிப்
2025
12:02
மெஞ்ஞானபுரம்; நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் மாசிதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காளகஸ்திக்கு இணையான ராகு, கேது பரிகார ஸ்தலம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயில் ஆகும். இங்குமாசி மஹாசிவராத்திரி, மாசிபெரும் திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. 2ம்நாளான 18ம்தேதி முதல் 10ம் நாளான 26ம்தேதி வரை தினமும் காலை முதல் மதியம் வரை அனுக்ஞை, உற்சவர் அபிஷேகம், வேல்பூஜை, சுவாமி,அம்பாள் தீபாராதனை, பூர்ணாஹீதி, அலங்காரம் நடக்கிறது. 7ம்நாள் விழாவில் மதியம் சுமங்கலிபூஜை நடக்கிறது. மேலும் 26ம்தேதி மாலை மெஞ்ஞானபுரம் பஜார், ஸ்ரீவிநாயகர்திடலிருந்து அஸ்வம் முன் வர பறவைக்காவடி மற்றும் மேளதாளத்துடன் 108பால்குட ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை தக்கார், பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார், செயலாளர் தசிந்தரன், பொருளாளர் ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.