பதிவு செய்த நாள்
07
டிச
2012
10:12
வடலூர்: வடலூர் ஞானசபை,தருமசாலையில், வள்ளலார் ஏற்றி வைத்த விளக்கு அணைந்ததாக பரவிய வதந்தியால், பெண்கள் வீட்டின் முன்விளக்கு ஏற்றி, பரிகாரம் செய்தனர். கடலூர் மாவட்டம்,வடலூரில் வள்ளலார் ஞானசபை, தருமசாலையில், இறைவன் ஜோதி வடிவமானவர் என்று உணர்த்த வள்ளலார்,இரண்டு இடங்களிலும்அவர் ஏற்றிய விளக்கு,தொடர்ந்து இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. வள்ளலார் ஏற்றிய விளக்கு, நேற்று முன்தினம் அணைந்து விட்டது; உலகம் அழிய போவதாகவும், வீட்டில் உள்ள ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், கடலூர், பண்ருட்டி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வதந்திபரவியது.இதனால் வடலூரில் பெண்கள், அதிகாலை முதல், வீட்டின் முன்அகல் விளக்கு ஏற்றியும்,வீட்டை சுத்தம் செய்துவழிபாடு செய்யத் தொடங்கினர். சத்திய ஞான சபை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், ""ஞானசபை, தருமசாலையில்,வள்ளலார் ஏற்றி வைத்தவிளக்கு அணையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது; அணைந்து விட்டதாககூறுவது வதந்தியே.இதை மக்கள் நம்ப வேண்டாம், என்றார். வள்ளலார் ஏற்றியவிளக்கு தொடர்ந்து எரிவதை, தாசில்தார் மங்களம் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.