பதிவு செய்த நாள்
22
பிப்
2025
07:02
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா முகூர்த்தகால் ஊன்றுதலுடன் நேற்று துவங்கியது.
பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவில் நேற்று (பிப்.21.,) சிறப்பு பூஜைகள் நடந்தது. முகூர்த்த கால் கோயில் உள்பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது. இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. பிப்.,25,ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடைபெறும். பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்வர். பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்துவர். மார்ச்.4,ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச்.11,ல் அம்மனுக்கு மாலை 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மார்ச்.12,ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெறும். மார்ச்.13, இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதுடன் திருவிழா நிறைவு பெறும். முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட அதிகாரிகள் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.