Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் மாசி ... செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் திருவிழா; பகதர்கள் வழிபாடு செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான பைக்கில் 3,000 கி.மீ., பயணித்து கும்பமேளாவிற்கு சென்ற தந்தை, மகன்
எழுத்தின் அளவு:
பழமையான பைக்கில் 3,000 கி.மீ., பயணித்து கும்பமேளாவிற்கு சென்ற தந்தை, மகன்

பதிவு செய்த நாள்

22 பிப்
2025
07:02

உடுப்பி; உடுப்பியை சேர்ந்த தந்தையும், மகனும் 25 ஆண்டுகள் பழமையான ‘ஹீரோ ஹோண்டா’ பைக்கில் மஹா கும்பமேளாவுக்கு சென்று வந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், ஜன., 26 முதல் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் புனித நீராட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதுவரை 55 கோடி பேர் இங்கு புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.


3,000 கி.மீ.,; கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், கபுவின் கட்டபடியை சேர்ந்தவர் ராஜேந்திர ஷெனாய், 52. இவரது மகன் பிரஜ்வல் ஷெனாய், 25. இருவரும் தங்களின் 25 ஆண்டு பழமையான ஹீரோ ஹோண்டா பைக்கில், பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டனர். கடந்த 6ம் தேதி அதிகாலை, வீட்டில் இருந்து புறப்பட்ட தந்தையும், மகனும், எல்லாபூர், ஹூப்பள்ளி, விஜயபுரா, சோலாபூர், லத்துார், நந்தன், நாக்பூர், ஜபல்பூர் வழியாக 3,000 கி.மீ., பயணித்து, பிப்., 10ல் பிரயாக்ராஜ் சென்றடைந்தனர். அங்கு புனித நீராடிய பின், அன்றைய தினமே புறப்பட்டு அதே வழித்தடத்தில், பிப்., 13ல் உடுப்பி வந்தடைந்தனர். வழியில் பெட்ரோல் பங்குகளில் இரவு உறங்கி, மறுநாள் காலை மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர்.


பிரஜ்வல் கூறியதாவது: நாங்கள் பிரயாக்ராஜ் சென்றடைவதற்கு முன்னரே, 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதித்ததனர். குளிக்கும் இடத்தில் எந்தவித நெரிசலும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆங்காங்கே தடுப்புகள் அமைத்திருந்தனர். எங்கள் பைக்கை பார்த்த மக்கள் பலரும், எங்களிடம் வந்து பேசிவிட்டு சென்றனர். மத்திய பிரதேச மாநிலம், சோய்னிக்கு செல்லும் வழியில், காரில் வந்த குந்தாபூரை சேர்ந்தவர், எங்களை நிறுத்தி, இனிப்பு, குளிர்பானம், பழங்கள் கொடுத்ததுடன், விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் கொடுத்து விட்டு சென்றார். இவ்வாறு அவர் கூறினார். தந்தை ராஜேந்திர ஷெனாய் கூறுகையில், ‘‘144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், மஹா கும்ப மேளாவுக்கு என் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் நான்கு நாள் பயணத்துக்கு, 20,000 ரூபாய் செலவானது. எங்களை பார்த்த குந்தாபுராவை சேர்ந்தவர், எங்களுக்கு புதிய ஹெல்மெட் ஒன்றும் வாங்கி கொடுத்தார்,’’ என்றார். 


ராஜேந்திர ஷெனாயின் மனைவி ரஜனி கூறுகையில், ‘‘எங்களிடம் கார் இருந்தும், தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் தான் சென்று வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் சேமிப்பு மூலம் கிடைத்த பணத்தை, அவர்களின் பயணத்துக்கு கொடுத்து அனுப்பினேன். மஹா கும்பமேளாவுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். அதுவே எனக்கு போதும்,’’ என்றார்.


சிகரத்தில் கன்னட கொடி; தந்தை, மகனுக்கு இதுவே முதல் பயணம் அல்ல. கடந்தாண்டு ஜூனில் இருவரும் இதே இருசக்கர வாகனத்தில், உலகின் இரண்டாவது உயரமான மலையான கார்துங்க் லாவுக்கு சென்றுள்ளனர். ஜூனில் இரு சக்கர வாகனத்தில், ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லே – லடாக், கார்கில், மனாலி வழியாக கார்துங்க் லா சென்றனர். 10 நாட்களில் 2,100 கி.மீ., கடந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 17,982 அடி சிகரமான கார்துங்க் லாவில், கன்னட கொடியை பறக்க விட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்  வருடாந்திர மகாசிவராத்திரி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar