உக்கடம் முத்துமாரியம்மன் கோவில் 92ம் ஆண்டு உற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2025 01:02
கோவை; உக்கடம் அருள்மிகு கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 92 -ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள் அன்று கணபதி ஹோமத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வானது அடுத்ததாக முகூர்த்த கால் நடும் விழா. அக்னி கம்பம் நடுதல் ஆகியன நடைபெற்றது. இதையடுத்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் | அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை ஆகிய நடைபெற்றது. இதையடுத்து பூவோடு எடுத்தல், திருமாங்கல்ய பூஜை, மாவிளக்கு பூஜை | அம்மன் ஊஞ்சல் அலங்காரம் ஆகியன நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான 23-02-2025 அன்று மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது..இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.