பதிவு செய்த நாள்
24
பிப்
2025
01:02
கோவை; ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் இன்று பஜனோத்ஸவ நிகழ்ச்சி நடக்கிறது.
ராம்நகர் ராமர் கோவிலில் (கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானம்) உள்ள ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் இன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை ஓசூர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தலைமையிலான இசைக்குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (பிப்.,25) மாலை 4:30 மணிக்கு பிரதோஷம், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை ஸ்ரீ கவுதம்கண்ணன் மற்றும் விட்டல் ஸ்ரீ சத்யநாராயணன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. பிப்.,26 அன்று மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணி வரை மஹாசிவராத்திரி நாமசங்கீர்தன நிகழ்ச்சியும் தொடர்ந்து குமாரி காம்யாஸ்ரீ பரஸ்ராம் நிகழ்ச்சியும், பிப்.,27 அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை காப்பாண்ணா மங்கலம் ஸ்ரீ வெங்கட்ராமன் பாகவதரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,28 அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை ஸ்ரீ கார்த்தி ஞானேஸ்வரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும், மார்ச், 1 அன்று மாலை 6:00 மணி சவிதா ஸ்ரீராம் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், மார்ச் 2 அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை கடையநல்லுார் ஸ்ரீ ராஜகோபால் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது.