பதிவு செய்த நாள்
25
பிப்
2025
11:02
திருப்பூர்; திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, மாசி மாதம் நடைபெறும். அதன்படி, கடந்த 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, மகா கணபதி பொங்கல் வழிபாடு நடந்தது; மாலையில், பார்க் ரோடு ராகவேந்திரா கோவிலில் இருந்து, கம்பம் மற்றும் கும்பம், முளைப்பாரி, வாண வேடிக்கையுடன் எடுத்துவரப்பட்டன. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, நேற்றிரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது; இன்று இரவு, 12:00 மணிக்கு அம்மனுக்கு படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நாளை காலை, 5:00 மணி முதல் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது; 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 28ம் தேதி கோவில் மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, பூவோடு ஊர்வலம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெறும்.