பதிவு செய்த நாள்
25
பிப்
2025
04:02
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திரரின் ஜயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இன்று விமரிசையாக நடந்தது. மஹோத்ஸவத்தையொட்டி, கடந்த 23ம் தேதி முதல் சங்கரமடத்தில் வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரி உள்ளிட்டவை நடந்து வந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் ஜயந்தி உற்சவமான இன்று காலை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடந்து, மஹா ஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5:30 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணையும், வித்வனான் குமரேஷ் மற்றும் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஜயந்தி மஹோத்ஸவத்திற்கான ஏற்பாட்டை, காஞ்சிபுரம் சங்கமடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் செய்திருந்தார்.