கடலுார் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, இன்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.