அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; பஞ்ச சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 11:02
கோவை; மகா சிவராத்திரிதினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் அருந்தவசெல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவிலில் அமைந்துள்ள பஞ்ச சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றம் பூஜைகள் நடைபெற்றன. இதில் முதல் லிங்கமான ப்ரித்வி லிங்கம் -மண் ஸ்தலம் லிங்கத்திற்கு மஞ்சள் நிற வஸ்திரமும் -இரண்டாம் லிங்கமான அப்புலிங்கம் நீர் ஸ்தலத்திற்கு காவிநிற வஸ்திரமும், மூன்றாம் லிங்கமான தேயு லிங்கம் -நெருப்புத் ஸ்தலத்திற்கு வெண்ணிற வஸ்திரமும் |நான்காம் லிங்கமான வாயுலிங்கம் காற்று ஸ்தலத்திற்கு சிகப்பு காவி வஸ்திரமும், ஐந்தாம் லிங்கமான ஆகாய லிங்கம் -ஆகாய ஸ்தலத்திற்கு இளம் காவி நிறத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.