Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவேரிப்பட்டணம் மயான கொள்ளை விழா; ... மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டம் திருவிழா; பல்லடம் வட்டார கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குண்டம் திருவிழா;  பல்லடம் வட்டார கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 பிப்
2025
10:02

பல்லடம்; சிவராத்திரி, அமாவாசை மற்றும் குண்டம் திருவிழா என, பல்லடம் வட்டார கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு, சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருளானந்த ஈஸ்வரர், காசி விஸ்வநாதர், சித்தம்பலம் நவகிரக கோட்டை, சுக்கம்பாளையம் வாரக்க நாடு, கே.என்.புரம் சந்திரமவுலீஸ்வரர், அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும், சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகங்கள், அபிஷேக அலங்கார பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என, சிவராத்திரி விழா இரவு முழுவதும் கொண்டாடப்பட்டது. நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து, அதிகாலை, 5.00 பணிக்கு அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  சிவராத்திரியை தொடர்ந்து, நேற்று, அமாவாசை வழிபாடு நடந்தது. சித்தம்பலம் நவகிரக கோட்டையில், மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட 108 தீர்த்தங்களால் நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் அதர்வன பத்திரகாளி பீடத்திலும் அமாவாசை வழிபாடு நடந்தது. நிக்கும்பலா யாகத்தை தொடர்ந்து, தங்க கவச அலங்காரத்தில் பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்வாறு, பல்லடம் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா, சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா மற்றும் அமாவாசை வழிபாடு என, கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar