பானுகோபன் என்பவன் யார் தெரியுமா? சிறுபிள்ளையாக இருக்கும்போது தொட்டில் தூங்கிக் கொண்டிருந்தான் இவன். உஷ்ணம் தாங்கமுடியாத படி அவன் முகத்தில் வெயில் காய்ந்தது. கோபத்தில் சூரியனைப் பிடித்துக் கட்டி வைத்தான். பின், பிரம்மாவின் வேண்டுகோளால் அவிழ்த்து விட்டான். அவனே சூரபத்மனின் மகனான பானுகோபன். பானு என்றால் சூரியன். சூரியனைக் கோபித்ததால் கோபன் என் பெயரும் இணைந்து பானுகோபன் ஆனான்.