பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய பாதயாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கைக்குழந்தைகளுக்கு கோயில் சார்பில் இலவசமாக பால் வழங்கப்பட்டது. அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு, இடும்பன் இட்டேரி ரோடு ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன.