மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள ஆவுடைய நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில் வருடாபிஷேக முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர்,சந்தனம்,நெய்,திரவியம்,இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாகம் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.வருடாபிஷேக விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.