திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 04:03
திருப்பதி; திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருப்பதி ஏஎம்ஆர்டி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர்கள் மாருதி நாயுடு மற்றும் தேவேந்திர நாயுடு ஆகியோர் திங்கள்கிழமை ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களை நன்கொடையாக வழங்கினர். இதையொட்டி, ஸ்ரீவாரி கோயில் முன்புறத்தில் ஸ்கூட்டர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்கூட்டர்களின் சாவிகள் துணை தலைமை நிர்வாக அதிகாரி லோகநாதத்திடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருமலை டிஐ சுப்பிரமணியம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.