பதிவு செய்த நாள்
03
மார்
2025
04:03
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், துஜபடம், ரிஷபக் கொடி பூஜை, பிரம்மாதி தேவர்கள் ஆவாகனம், அஸ்திரதேவர் நந்திகேஸ்வரர் பூஜை நடந்தது. பகல் 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது. சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள் ஆவாகனம், ரக்ஷாபந்தனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி தென்பெண்ணையாற்றில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.