Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது நத்தம் மாரியம்மன் கோவில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 மார்
2025
05:03

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோற்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 


உற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி, முதல் நாள் உற்சவமான இன்று காலை, கொடியேற்றத்தை தொடர்ந்து, காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு தங்க மான் வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மகரத்திலும், இரவு சந்திர பிரபையிலும், நாளை மறுநாள் காலை, தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், வெள்ளி ரதம் உற்சவம், வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar