Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவம்; ... இன்று நகர வீதிகளில் பவனி வருகிறது கோவை கோனியம்மன் தேர் இன்று நகர வீதிகளில் பவனி வருகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
01:03

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 18ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.


இன்று காலை பல்லக்கில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 8:30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் காலை 9:25 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேறினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் சிவகுரு சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் அரங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மத் தேவன், சண்முகசுந்தரம், ராமையா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். 


சுவாமி புறப்பாடு: திருவிழா நடைபெறும் மார்ச் 20 வரை காலையில் தங்க சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். 


திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 11 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு நக்கீர வீலை நிகழ்ச்சியும், மார்ச் 12ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 13 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, ஏப். 14ல் பச்சைக்குதிரை ஓட்டம், மார்ச் 16ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது, மார்ச் 17ல் பட்டாபிஷேகம், மார்ச் 18ல் திருக்கல்யாணம், மார்ச் 19ல் தேரோட்டம், மார்ச் 20ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar