Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி ... பல்லடம்‌ மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா பல்லடம்‌ மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
04:03

திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.


இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உத்ஸவம் பிரசித்தி பெற்றது. இதில் பெண்கள் வேண்டுதலுக்கு மகா லெட்சுமிக்கு தீப வழிபாடு செய்கின்றனர். உற்சவம் துவக்கத்தை முன்னிட்டு இன்று காலை 7:15 மணிக்கு உற்ஸவ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். தொடர்ந்து சக்கரத்தாழ்வார்,கொடிபடம் திருவீதி உலா துவங்கியது. தேரோடும் வீதியில் பலிபீடங்களுக்கு பூஜைகள் நடந்து காலை 10:10 மணிக்கு கோயில் வந்தனர். தொடர்ந்து காலை 10:26 மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கும்,சுவாமிக்கும் பூஜைகள், அபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் வேண்டுதலுக்காக பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தித்தனர். மாலையில் நித்ய யாகசாலையில் பட்டாச்சார்யர்களால் நவகலச பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், உபயநாச்சியார்,ஆச்சார்யர்க்கு காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. நாளை முதல் தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். மார்ச் 13 ல் வெண்ணெய்த்தாழி சேவையும், தெப்பம் முட்டுத் தள்ளுதலும் நடைபெறும். மார்ச் 14 காலை 12:16 மணி அளவில் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரி, இரவில் சுவாமி ஆஸ்தானம் சேருதலுடன் உற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar