Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் ... காஞ்சி காமாட்சியம்மன் கண்ணன் அலங்காரத்தில் வீதி உலா; பக்தர்கள் வழிபாடு காஞ்சி காமாட்சியம்மன் கண்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாந்தீஸ்வரர் பூஜையில் கட்டுக்கடங்காத கூட்டம் ‘ஆன்லைன் டிக்கெட்’ வசதி கொண்டுவர கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாந்தீஸ்வரர் பூஜையில் கட்டுக்கடங்காத கூட்டம் ‘ஆன்லைன் டிக்கெட்’ வசதி கொண்டுவர கோரிக்கை

பதிவு செய்த நாள்

08 மார்
2025
04:03

திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.


இக்கோவிலில், 2010 முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு பின், 2023 மார்ச் முதல் மாந்தீஸ்வரர் பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இந்த பூஜையில், காலை 6-:00 முதல் 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 160 –-- 200 பக்தர்கள் வரை பூஜையில் பங்கேற்று வருகின்றனர். இதற்கு கட்டணமாக, 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்து உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து, இரண்டு முதல் ஆறு மணி நேரம் பயணித்து, காலை நடைபெறும் பூஜையில் பங்கேற்கின்றனர். சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை பெற குறைந்தது, இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் வாரந்தோறும் வரும் நிலையில், நீண்ட வரிசையை கண்டு பலரும் பூஜையில் பங்கேற்காமல் திரும்பி செல்வதாக கூறுகின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதால் அலைச்சல் ஏற்படுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர். இதற்கு முன், ‘ஆன்லைன்’ வாயிலாக பரிகார பூஜைக்கான டிக்கெட் பெறப்பட்ட போது சிரமமின்றி இருந்ததாக தெரிவிக்கின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை, திருத்தணி கோவில் நிர்வாகம் கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar