சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 04:03
சிவகங்கை; சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சுதர்சன ேஹாமம், திருமஞ்சனம், திருவாரதன பூஜைகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு, பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகளில் நகர்வலம் வந்தார். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்தார். வருஷாபிேஷக பூஜைகளை கோயில் பட்டாச்சார்யா முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோபால் செய்திருந்தனர்.