ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தீ பந்தங்களுடன் பந்தகாட்சி உலா வந்த பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2025 10:03
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் ஒற்றை பிரபையில் பந்தகாட்சி வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பம்) திருவிழாவின் 9ம் நாளில் ஒற்றை பிரபையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீ பந்தங்களுடன் பந்தகாட்சி வைபவம் நடைபெற்றது. காலை தெப்ப மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, இரவு 7 மணியளவில் தெப்ப மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சேர்ந்தார். இத்துடன் திருப்பள்ளி ஓடம் தெப்பத் திருநாள் இனிதே முடிவடைந்தது. நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.