Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிரங்குடி செந்தில் முருகன் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தீ பந்தங்களுடன் பந்தகாட்சி உலா வந்த பெருமாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் யானை ஓட்டத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் யானை ஓட்டத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 மார்
2025
06:03

பாலக்காடு; கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மாசி மாத உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 38 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுளால் பகுதியில் துவங்கிய யானையோட்டத்தில் செந்தாமராக் ஷன், பாலு, தேவதாஸ் ஆகிய யானைகள் போட்டி போட்டு ஓடின. முதலில் ஓடிக்கொண்டிருந்த செந்தாமராக் ஷன் என்ற யானையை முந்தி தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் விறு விறு என ஓடி நுழைந்த பாலு யானை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலு என்ற யானை வெற்றி பெறுவது முதல் முறையாகும். இதையடுத்து, பாலு யானை சுற்றம்பலத்தை ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு "யானையூட்டு (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தது. வரும், 10 நாட்கள் விழாவில், பாலு யானை மீது உற்சவர் அமர்ந்து பவனி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காலையில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சவமூர்த்தியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar