Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... காஞ்சி சங்கர மடத்தில் நுால் வெளியீடு விஜயேந்திரர் விருது வழங்கி ஆசியுரை காஞ்சி சங்கர மடத்தில் நுால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 மார்
2025
12:03

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.


காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து, இன்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சணம் பூஜை செய்யப்பட்டது. பின், திருமணக் கோலத்தில் உச்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன. புண்ணிய வாகம் முடிந்த பின், அரங்கநாதப் பெருமாளுக்கு பூணுால் அணிவித்து, கங்கணம் கட்டி, குலம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி சுவாமிகள், வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் மஞ்சள் இடித்து, மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர். அரங்கநாதப் பெருமாளின் சார்பாக அர்ச்சகர்கள் திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவிக்கு அணிவித்தனர். பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. நாளை அதிகாலை, 5:30 மணிக்கு அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar