பதிவு செய்த நாள்
11
மார்
2025
03:03
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக பெருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நமச்சிவாய கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.