காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள சூரக்குடி ஆவுடை நாயகியம்மன் சமேத தேசிக நாதர் கோயிலில் தொடர் திருட்டுச் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், சிலைகள் உடைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
காரைக்குடி அருகே உள்ள சூரக்குடி ஊராட்சி, பூவாண்டிபட்டியில் ஆவுடை நாயகியம்மன் சமேத தேசிகநாதர் கோயில் உள்ளது. 300 ஆண்டு பழமையான இக்கோயிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோயில் கோபுரத்தில் இருந்த இடிதாங்கி திருடப்பட்டது. தொடர்ந்து செம்பு கம்பிகளும் திருடப்பட்டுள்ளது. நேற்று, கோயில் நிர்வாகத்தினர் பணிகளைப் பார்வையிடுவதற்காக கோயிலுக்குச் சென்ற பார்த்து போது, புதிதாக கட்டப்பட்டு வரும் கோயில் கோபுர சிலைகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பா.ஜ.,வினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.