பதிவு செய்த நாள்
12
மார்
2025
03:03
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது முக்கிய விழாவான பொங்கல் விழா ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.
தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த விழாவின் போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்புத்தொட்டில்,ஆயிரங்கண் பானை,முடி காணிக்கை,உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர்.இந்தாண்டிற்க்கான திருவிழா வருகிற 29ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.மறுநாள் 6ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.7ம் தேதி காலை 7:20 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு பூப்பல்லாக்கும் நடைபெற உள்ளது.விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருக்கோயில் தீர்த்தவாரி 8ம் தேதி இரவு 7:40 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கான பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.