புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2025 05:03
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்டு உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து வழிபாடு நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. மிகப்பழமையான இக்கோவிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. இச்சிலை தான் ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலையாக கருதப்படுகிறது. தாவிச்செல்லும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, குளமங்கலம் கிராம மக்கள் சார்பில் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை அணிவித்து வழிபாடு நடத்துகின்றனர்.