சென்னை; மாசி மக தீர்த்தவாரி உத்சவம், மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி நாளில் சில கோவில்களிலும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்களில், தீர்த்தவாரி உத்சவம் நேற்று நடந்தது. மெரினா கடற்கரையில் நடந்த தீர்த்தவாரி உத்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பலர், தர்ப்பணம் கொடுத்து மூதாதையர் வழிபாடு நடத்தினர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில், நாளை, தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.