சாணார்பட்டி; திண்டுக்கல் அருகே புதுப்பட்டி கிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ விஷ்வக்சேனர் வழிபாடு மஹாசங்கல்பம், யாகபூஜை வேத பாராயணம் மற்றும் யாந்திரம், மற்றும் ஸ்ரீ விஷ்வக்சேனர் மஹா சங்கல்பம், யாகசாலையில் பூஜைகள், வேத பாராயணம், நாடி சாந்தம்,மூலிகையில் யாகம் தீப ஆராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.