சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை தயாராகிறது.
பழமையான இக்கோயிலில் ஜெனக நாராயண பெருமாள் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் வெண்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள்வார்.
இக்கோயிலின் பழமையான தேக்கு மரத்தாலான குதிரை வாகனத்தை மராமத்து செய்து கள்ளழகருக்கு தங்கக் குதிரையாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.
மதுரை ஸ்தபதி தங்கதுரை தலைமையில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.22 லட்சம் செலவில் குதிரை மர சிற்பத்திற்கு மேல் தாமிர தகடுகளை பொருத்தி, அதில் தங்க முலாம் பூசப்பட உள்ளது.
மே 12ல் நாராயண பெருமாள் கள்ளழகர் கோலத்தில் தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார்.
செயல் அலுவலர் சுதா கூறுகையில், ‘‘தங்கக் குதிரை தயார் செய்ய அனுமதி கோரி ஆணையருக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனுமதி கிடைத்தவுடன் கும்பாபிஷேக பணிகளும் துவங்கப்பட உள்ளது’’ என்றார்.