சாலிகிராமம் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 11:03
சாலிகிராமம்; சென்னை சாலிகிராமம் முத்துக்குமரப்பா தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது. இச்சக்திபீடத்தின் திருகுடமுழுக்கு விழா, 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு, குரு பூஜையுடன் துவங்கியது. பின், 14ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோபுர கலச ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தெடார்ந்து 15ம் தேதி காலை 7:30 மணிக்கு சக்தி கொடி ஏற்றுதல், காலை 10:45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை, மாலை 5:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, இரவு 7:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மேல்மருத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் திருக்குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். தொடர்ந்து மதியம் அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.