பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பங்குனி மாத திங்கள் கிழமையான நேற்று, திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. மாணிக்கவாசகர் திருக்கூட்டம், அர்த்தஜாம பூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், திங்கட்கிழமை தோறும், திருவாசகம் முற்றோதல் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், முற்றோதல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிவனடியார்களின் சிறப்பு வழிபாட்டுடன் முற்றோதல் துவங்கியது. சிவபுராணம், கீர்த்தி திரு அகவல், திருவண்டப்பகுதி, போற்றி திருஅகவல், நீத்தல் விண்ணப்பம், திருஅம்மானை என, 51 வகை பதிகங்களையும் பாடினர்; நிறைவாக, அச்சோப்பதிகத்தை பாடி நிறைவு செய்தனர். நிறைவாக, உலக நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனையும், மகாதீபாராதனையும் நடந்தது.