பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான தவன உற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் சக்கரத்தாழ்வார் சன்னிதி பின்புறம் உள்ள தோட்ட உற்சவ மண்டபத்தில் பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். மதியம் 1:30 மணிக்கு திருஞ்சனம், ஆஸ்தானமும், மாலை 5:30 மணிக்குதிருவாராதனம், நிவேதனம், தீர்த்தம், சடாரி, துாப, தீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பெருமாள், தாயார் புறப்பாடும், பத்தி உலாத்தல் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆழ்வார் பிரகாரமாக பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து பெருந்தேவி தாயார், சன்னிதிக்கும், பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினர். தவன உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.