பதிவு செய்த நாள்
18
மார்
2025
04:03
குன்றத்துார்; குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை, இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை தினங்களில், கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும். இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோடை காலம் துவங்கி உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக, கோவிலில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதம் காக்க தரைவிரிப்பு மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மலை படிக்கட்டுகளில் தண்ணீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.