பதிவு செய்த நாள்
18
மார்
2025
04:03
திருச்சி; காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு காரைக்கால் அம்மையாருக்கு 21 வகையான அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான சிவனடியார்கள் வழிபாடு செய்தனர்.
பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமானவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையார் குருபூஜைதினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், எல்லா சிவாலயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக்கப்படும். காரைக்கால் அம்மையாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு அம்மையார் அருள்நெறிமன்றம் சார்பில், திருச்சி திருவானைக்காவல் தனியார் அரங்கில் காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் விபூதி, பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவிய பொடி, அரிசி மாவு, மஞ்சள், பழச்சாறு உள்ளிட்ட 21 வகையான திரவியங்களைக் கொண்டு காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான சிவனடியார்கள் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதியபடி வழிபட்டனர்.