காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று (18.3.2025) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சிஅஞ்சி கணபதி (கன்யா மூல கணபதி) சன்னதியில் சாஸ்திர முறைப்படி கோயில் அர்ச்சகர்கள் சதுர்த்தி ஹோமம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயிலின் துணை தலைமை நிர்வாக அதிகாரி என்.ஆர். கிருஷ்ணா ரெட்டி மற்றும் கோயில் கண்காணிப்பாளர் மற்றும் சி.எஸ்.ஓ நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.