பழநி: பழநி கோயில் ரோப்காரில் புதிய இரும்பு கயிறு பொருத்தும் பணி நேற்று துவங்கியது. சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட இரும்பு கயிறை பொருத்தியதால் ரோப்காரில் இருந்து சப்தம் வந்தது. இதனால் இரும்புகயிறை மாற்ற முடிவு செய்யப்பட்டு, கடந்த அக். 20-ல் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து 720 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு கயிறு நேற்று பழநி வந்தடைந்தது. இதனை பொருத்தும் பணி துவங்கியது. இப்பணி முடிந்தவுடன், ஒவ்வொரு ரோப்கார் பெட்டியிலும் 300 கிலோ எடையுள்ள கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். ரோப்கார் கமிட்டியிடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின். ரோப்கார் இயக்கம் துவங்கும்.